Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை நவம்பர் 01, 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை நவம்பர் 01, 2021
சென்னை: பிலவ வருடம் ஐப்பசி 15 ஆம் தேதி நவம்பர் 01 ,2021 திங்கட்கிழமை. ஏகாதசி திதி பகல் 01.12 மணி வரை அதன் பின் துவாதசி திதி. பூரம் பகல் 12.52 மணிவரை அதன் பின் உத்திரம். சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியிலும் கன்னி ராசியிலும் பயணம் செய்கிறார். மகர ராசிக்காரர்களுக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. ஆறாம் வீட்டில் பயணிக்கும் சந்திரனால் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.சேமிப்பு உயரும்.
ரிஷபம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும்.
மிதுனம்
சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை விசயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
கடகம்
சந்திரன் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உடல் வேலை செய்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். நிதானத்தை கடைப்பிடிப்பதன் மூலம் விரயங்களை தவிர்க்கலாம்.
சிம்மம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வீடு தேடி வரும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் நன்மைகள் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலை செய்யும் இடத்தில் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் வீடு தேடி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.
விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களின் உதவியால் எடுத்த காரியம் எளிதில் முடியும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
தனுசு
சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வேலைபளு குறையும்.
மகரம்
சந்திரன் மாலைக்கு மேல் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் விட்டிற்கு வருகிறார். மாலை வரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியம் கைகூடி வரும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
மீனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு வருகிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமை நீங்கி லாபம் அதிகரிக்கும்.