கிருஷ்ணகிரி கட்டிகாணப்பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவரின் அலச்சியப் போக்கினால் குண்டும் குழியும்மான சாலையால் மக்கள் அவதி, சாலையில் நாற்று நட்டு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்.
கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட
கட்டிகாணப்பள்ளி தமிழகத்தின் மிகப்பெரிய ஊராட்சியாக உள்ளது.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் மாவட்ட ஆட்சியரை தவிர்த்து அனைத்து அரசு துறை அதிகாரிகளும் இப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.
இதனால் வி.ஐ.பி அந்தஸ்து பெற்று உள்ள இந்த ஊராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக மட்டுமின்றி நோய் பரப்பும் ஊராட்சியாக உருமாறி உள்ளது.
மேலும் சாலைகளின் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படதால் பெரும்பாலான சாலைகள் குண்டு குழியும்மாக காணப்படுவதால் சாலைகளில் செல்பவர்கள் மட்டுமின்றி பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சாலைகளில்
தேங்கி உள்ள கழிவுநீர்களை அகற்றி சாலையை செப்பனிட வலியுறுத்தி அப்பகுதி மக்கள்
கட்டிகாணப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றத் தலைவரின் அலச்சியமான போக்கினை கண்டித்து சாலையில் நாற்று நடவு செய்து தங்களது எதிர்ப்பினை தெரிவிதிதனர்.
இதுகுறித்து அப்பகுதியை
சேந்த மக்கள் கூறுகையில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இன்றி கட்டிக் காணப்பள்ளி செயல்பட்டு வருகிறது, ஊராட்சி மன்றத் தலைவரின் அலச்சியமான போக்கினால் நோய்பரவும் ஊராட்சியாக மாறி உள்ளது, எங்கு பார்த்தாலும் குப்பைகள், மருத்துவ கழிவுகள் போன்றவற்றினை அள்ளப்படாததால் நோய்பரவும் இடம்மாக மாறி உள்ளது.
குறிப்பாக விடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்கள் இன்றி கழிவுநீர் அனைத்தும் சாலைகளில் குளம்போல காட்சி அளிப்பாதல் சாலைகளில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு இருப்பதால், உடனடியாகசாலைகளை சீர்செய்வதோடு சாலையில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றி சாலை அமைக்கும் பணியை துவங்க விட்டால் கட்டிகாணப்பள்ளி ஊராசியை பூட்டு போட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என கிராம மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.