நீண்டகால லட்சியம் மற்றும் பரந்த பார்வை கொண்ட அதிகாரிகள் பிரதமரின் தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைய உதவுவார்கள்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Loading

புதுதில்லி, அக்டோபர் 26, 2021

நீண்டகால லட்சியம், பரந்த பார்வை மற்றும் கூட்டு முயற்சிகளை உருவாக்கும் திறன் ஆகியவற்றை கொண்ட அதிகாரிகள் பிரதமரின் தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைய உதவுவார்கள் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடெமியின் முதல் பொது இடைப்பணி கால பயிற்சி திட்டத்தின் பங்கேற்பாளர்களிடையே சிறப்புரை ஆற்றிய அவர், இந்த பயிற்சி பெறும் 150 அதிகாரிகள் திரு மோடியின் புதிய இந்தியாவின் சிற்பிகளாக இருக்கப் போகிறார்கள் என்றார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டில் பொதுப் பயிற்சி பெறும் நல்வாய்ப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளது என்றும், இந்தியா 100 வயதை எட்டும் அடுத்த 20 முதல் 25 ஆண்டுகள் வரை அவர்கள் சேவை செய்ய வேண்டும் என்றும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து, உலக அரங்கில் நாட்டை உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

ஆழ்ந்த செவிமடுத்தல், இரக்கம், பணியை திறம்பட செய்தல் மற்றும் கூட்டுப் படைப்பாற்றல் உள்ளிட்ட அம்சங்களின் முக்கியத்துவத்தின் மீது இந்த பயிற்சி கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

2017-ம் ஆண்டு இதே நாளில் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடெமிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வருகை தந்ததை நினைவு கூர்ந்த டாக்டர் ஜிதேந்திர சிங், நிர்வாகம், ஆளுகை, தொழில்நுட்பம் மற்றும் கொள்கை உருவாக்கம் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்றும், தேசிய பார்வையை வளர்ப்பதில் இவற்றின் அவசியத்தை திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார் என்றும் கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *