காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு சென்னை பெருநகரில் பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் பேச்சு போட்டி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த காவல் அதிகாரிகள் மற்றும்
ஆளிநர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று காவலர் “வீர வணக்க நாள்“
அனுசரிக்கப்படுகிறது. அதன்பேரில், கடந்த 21.10.2021 அன்று தமிழக காவல்துறை
தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில், காவல்துறை தலைமை இயக்குநர்
தலைமையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு, பணியின்போது இறந்த
காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தி, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.
காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி
மாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர
காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில்,
21.10.2021 முதல் 31.10.2021 வரையிலான 11 நாட்கள் “காவலர் வீர வணக்க வாரமாக”
(Police Commemoration Week) கடைபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல்துறை
சார்பில், பணியின்போது உயிர் தியாகம் செய்த காவல் துறையினரின் திருவுருவப்
படங்களுக்கு அஞ்சலி செலுத்துதல், காவல்துறையினரின் பணிகள் மற்றும் வீரதீர செயல்கள்
புரிந்து உயிர் தியாகம் செய்த காவல்துறையினர் குறித்த கண்காட்சியகங்கள், நாடகங்கள்,
காவல் வாத்திய குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், மினி மாரத்தான் போட்டிகள்,
விளையாட்டு நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள், ஓவிய போட்டிகள், எழுத்து போட்டிகள்,
சைக்கிள் பேரணி என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று (26.10.2021) காலை, வண்ணாரப்பேட்டை காவல்
மாவட்டம் N-1 இராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைமகள் மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளியில் காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி
நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் காவல் சிறார், சிறுமியர்
மன்றங்களிலிருந்தும் சுமார் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, நடனம், சிலம்பம்,
மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு
காவல்துறையினரின் கடமைகள், தியாகங்கள், கொரோனா காலத்திலும் முன்கள
பணியாற்றிய விதம் குறித்து எடுத்துரைத்தனர். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற காவல்
அதிகாரி திரு.S.R.ஜாங்கிட், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு பணியின்போது வீர
மரணமடைந்த மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள பணியாற்றி உயிர்
நீத்தகாவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி
செலுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று (26.10.2021) காலை அடையார் காவல் மாவட்டம் J-
7 வேளச்சேரி காவல் நிலையம் அருகில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு
பெரியசாமி மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளிடம் காவல்துறையினரின் கடமைகள்,
தியாகங்கள், கொரோனா காலத்திலும் முன்கள பணியாற்றிய விதம் குறித்து
எடுத்துரைத்தனர். மேலும் மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் துணை ஆணையாளர் நிர்வாகம் P.மகேந்திரன், இ.கா.ப,
(பொறுப்பு அடையார் காவல் மாவட்டம்) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ
மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் 60க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,
மாணவிகள் கலந்து கொண்டனர்.
புனிததோமையர் மாலை காவல் மாவட்டம் S-13 குரேம்பேட்டை காவல் நிலைய
எல்லைக்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (26.10.2021) காவலர் வீர
வணக்க வாரத்தை முன்னிட்டு, நாடகம், சிலம்பாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டது. பணியின்போது வீர மரணமடைந்த மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில்
முன்கள பணியாற்றி உயிர் நீத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் திருவுருவ
படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளிடம்
காவல்துறையினரின் கடமைகள், தியாகங்கள், கொரோனா காலத்திலும் முன்கள
பணியாற்றிய விதம் குறித்து எடுத்துரைத்தனர். இதில் தாம்பரம் உதவி ஆணையாளர்,
காவல் ஆய்வாளர் மற்றும் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து
கொண்டனர்.
அண்ணாநகர் காவல் மாவட்டம், V-5 திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
பகுதியில் உள்ள கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரியில் இன்று (26.10.2021) மாலை
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு கவிதை வாசித்தல், மற்றும் கலைநிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டது. பணியின்போது வீர மரணமடைந்த மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில்
முன்கள பணியாற்றி உயிர் நீத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளிடம் காவல்துறையினரின் கடமைகள்,
தியாகங்கள், கொரோனா காலத்திலும் முன்கள பணியாற்றிய விதம் குறித்து
எடுத்துரைத்தனர். இதில் இணை ஆணையாளர் (மேற்கு) திருமதி.ராஜேஸ்வரி, இ.கா.ப
அவர்கள், அண்ணாநகர் துணை ஆணையாளர் திருமதி. தீபாகனிகர், இ.கா.ப, காவல்
அதிகாரிகள், கல்லூரி முதல்வர் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து
கொண்டனர்.
தி.நகர் காவல் மாவட்டம், R-4 பாண்டிபஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
கர்நாடகா மேல்நிலைப்பள்ளியில் இன்று (26.10.2021) மாலை காவலர் வீர வணக்க
வாரத்தை முன்னிட்டு, பேச்சுப்போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும்
மாணவ மாணவிகளிடம் காவல்துறையினரின் கடமைகள், தியாகங்கள், கொரோனா
காலத்திலும் முன்கள பணியாற்றிய விதம் குறித்து எடுத்துரைத்தனர். இதில்
தேனாம்பேட்டை உதவி ஆணையாளர், காவல் ஆய்வாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட
மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கீழ்பாக்கம் காவல் மாவட்டம், G-1 வேப்பேரி காவல் நிலைய வளாகத்தில் இன்று
(26.10.2021) மாலை காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவ
மாணவிகளுக்கு தெருக்கூத்து மற்றும் நாடகம் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ
மாணவிகளுக்கு கீழ்பாக்கம் துணை ஆணையாளர் திரு.கார்த்திகேயன், இ.கா.ப, அவர்கள்
பரிசுகள் வழங்கினார். மேலும் மாணவ மாணவிகளிடம் காவல்துறையினரின் கடமைகள்,
தியாகங்கள், கொரோனா காலத்திலும் முன்கள பணியாற்றிய விதம் குறித்து
எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட
மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.