இன்றைய ராசி பலன் புதன்கிழமை அக்டோபர் 20, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை அக்டோபர் 20, 2021

சென்னை: பிலவ வருடம் ஐப்பசி 3 ஆம் தேதி அக்டோபர் 20,2021 புதன்கிழமை. பௌர்ணமி திதி இரவு 08.26 மணி வரை அதன் பின் பிரதமை. ரேவதி பகல் 02.01 மணிவரை அதன் பின் அசுவினி. சந்திரன் இன்று மீன ராசியில் பிற்பகல் வரையிலும் பிற்பகலுக்கு மேல் மேஷ ராசியிலும் பயணம் செய்கிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. புதன்பகவானின் ஆசி நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை. பண வரவு அதிகமாக இருந்தாலும் கூடுதல் செலவுகளும் இருக்கும்.

ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வீடு தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியைத் தரும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். பழைய கடன்கள் வசூலாகும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.

கடகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

சிம்மம்
சந்திரன் இன்று எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு பிற்பகல் 2 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிற்பகலுக்கு மேல் பிரச்சினைகள் குறைந்து நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

கன்னி
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிற்பகலுக்கு மேல் சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு வருகிறார். பயணங்களில் கவனம் தேவை. மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமான வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை அடையலாம். எதிலும் பொறுமை தேவை.

தனுசு
சந்திரன் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்
சந்திரன் முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்
சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். வீண் விரயங்களை தவிர்க்கலாம்.

மீனம் சந்திரன்
உங்கள் ராசியிலும் பிற்பகலுக்கு மேல் இரண்டாம் வீட்டிலும் பயண செய்கிறார். இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். வருமானம் அதிகரிக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *