Today’s Rasi Palan :இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 19, 2021

Loading

Today’s Rasi Palan :இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 19, 2021

சென்னை: பிலவ வருடம் ஐப்பசி 2 ஆம் தேதி அக்டோபர் 19,2021 செவ்வாய்க்கிழமை. சதுர்த்தசி திதி இரவு 07.03 மணி வரை அதன் பின் பௌர்ணமி திதி. உத்திரட்டாதி பகல் 12.12 மணிவரை அதன் பின் ரேவதி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மீன ராசியில் பயணம் செய்கிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திடீர் வருமானம் அதிகரிக்கும் கூடவே செலவுகளும் வரும். இன்று உங்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். உறவினர்களால் உற்சாகம் பிறக்கும்.

ரிஷபம்
சந்திரன் இன்று லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுபசெய்திகள் வீடு தேடி வரும். மனமகிழ்ச்சி அடைவீர்கள். செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். புதிய பொருள் வீடு தேடி வரும்.

மிதுனம்
சந்திரன் இன்று பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று இல்லத்தில் சுபசெய்திகள் வீடு தேடி வரும் மன மகிழ்ச்சி கூடும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் லாபம் அதிகரிக்கும். புதிய வேலைக்காக முயற்சி செய்வீர்கள். உத்தியோக ரீதியான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

கடகம்
சந்திரன் இன்று ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும்.

சிம்மம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாதிருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது நிதானத்துடன் செல்வது அவசியம்.

கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு நன்மையைத் தரும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஏற்பட்டிருந்த மனசங்கடங்கள் மறையும். நண்பர்களால் நன்மைகள் அதிகரிக்கும்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு மன அமைதி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி எளிதில் கிட்டும். புதிய நபரின் அறிமுகம் அதிகரிக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.

கும்பம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மன குழப்பங்கள் நீங்கும். இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்காவிட்டல் கடன் வாங்க நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.

மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். புதுவிதமான செயல்பாட்டால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

0Shares

Leave a Reply