கடலுார் மாவட்ட காவல்துறை செய்தி

Loading

கடலுார் மாவட்ட காவல்துறை செய்தி 93 – வது தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மூலம் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் முதியோருக்கான ( MASTER ) தடகள போட்டி 15.10.2021,16.10.2021 , மற்றும் 17.10.2021 ஆகிய 3 நாள்கள் நடைபெற்ற தடகள் போட்டியில் கடலூர் மாவட்ட காவல்துறையை சேர்ந்த ஆயுதப்படை முதல்நிலை காவலர் ஷாம் பிரகாஷ் அவர்கள் 35 வயதிற்கு மேற்பட்டோர்கான 4 * 100 மீட்டர் தொடர் ஒட்டத்தில் பங்கு பெற்று முதல் இடத்தையும் , 400 மீட்டர் ஒட்டபந்தயத்தில் 3 ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றார் . கடலூர் துறைமுகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு . சக்திவேல் அவர்கள் 50 வயதிற்கான தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டம் , நீளம் தாண்டும் போட்டியில் 2 ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றார் . பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவர்கள் 35 வயதி மேற்பட்டோர்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கு பெற்று 2 ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றார் . கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் IPS அவர்கள் தமிழ்நாடு மாநில தடகள போட்டியில் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் . ஆயுதப்படை காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் அவர்கள் உடன் இருந்தார் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *