Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை அக்டோபர் 15 , 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை அக்டோபர் 15 , 2021

சென்னை: பிலவ வருடம் புரட்டாசி 29 ஆம் தேதி அக்டோபர் 15,2021 வெள்ளிக்கிழமை. தசமி திதி மாலை 06.02 மணி வரை அதன் பின் ஏகாதசி திதி. திருவோணம் காலை 09.16 மணிவரை அதன் பின் அவிட்டம் நட்சத்திரம். சந்திரன் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. சுக்கிரன் ஆசிகள் நிறைந்த வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்வது என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

ரிஷபம் சந்திரன் இன்று ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மிதுனம்
சந்திரன் இன்று எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகு

கடகம்
சந்திரன் இன்று ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

சிம்மம்
சந்திரன் இன்று ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பண வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை நீங்கும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி
சந்திரன் இன்று ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். செலவுகள் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். பெண்களுக்கு சந்தோஷமான நாள். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்
சந்திரன் இன்று நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்
சந்திரன் இன்று மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் சந்தோஷமும் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு
சந்திரன் இன்று இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். பணபற்றாக்குறை ஓரளவு குறையும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்
சந்திரன் உங்கள் ராசியில் சனி, குருவுடன் இணைந்து பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தாராள தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

கும்பம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சிறிய தடைக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்தில் உறவினர்களால் லாபம் அதிகரிக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *