முதியோர் இல்ல தின விழாவினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் துவக்கிவைத்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கண்டவராயன்பட்டி ஊராட்சியில்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ட்ரூபா இல்லத்தில் முதியோர் இல்ல தின விழாவினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
கே ஆர் பெரியகருப்பன் துவக்கிவைத்தார்.
இவ்விழாவில் முதியோர்கள் மட்டும் கலந்துகொண்ட பாட்டுப்போட்டி, நாடகப் போட்டி நடைபெற்றது. அப்போட்டிகளில் வெற்றிபெற்ற முதியோர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சிறப்புப்பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன்ரெட்டி, மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, ட்ரூபா முதியோர் இல்ல இயக்குநர் மைக்கேல்அன்னராஜ்,
மாவட்ட சித்தா மருத்துவர் பிரபாகரன், வட்டாட்சியர் பஞ்சாபிகேசன் உட்பட துறைசார் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.