நரேந்திர மோடியின் 77 அமைச்சர்கள் ஜம்மு காஷ்மீரின் எதிர்காலத்திற்காக பாடுபடுகிறார்கள் ராஜீவ் சந்திரசேகர்
செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் முதன்முறையாக நான் ஜம்மு-காஷ்மீரில் பயணம்
மேற்கொண்டேன். கடந்த பல ஆண்டுகளாக நாடு முழுவதும், உலகம் முழுவதும் நான்
பயணம் செய்துள்ளேன், ஆனால் ஜம்மு-காஷ்மீருக்கு என்னால் பயணம் செய்ய
இயலவில்லை. இது வருத்தமானது என்றாலும் உண்மையானது.
இந்தப் பயணத்தின்போது ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர், பட்காம், பாரமுல்லா
மாவட்டங்களுக்கு நான் சென்றிருந்தேன். நமது பிரதமர் எதிர்பார்த்தது போலவே
எனது பயணத்திட்டம் மக்களுடன் உரையாடுவதாகவும், சவால்மிக்க கொவிட்
காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதாகவும்
அமைந்தது.
பட்காம் பட்டப்படிப்பு கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் பாலிடெக்னிக்
கல்லூரியைச் சேர்ந்த இளம் பெண்கள் குழுவினர் என்னை சந்தித்தனர். “தற்போது
பட்டயப்படிப்புகள் எந்திரவியல் மற்றும் சிவில் பிரிவில் மட்டுமே இருப்பதற்கு பதிலாக
மின்னணுவியல், கணினி வகுப்புகளை நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர்கள்
தெரிவித்தனர்.
முதன்மையான ஐடிஐ தொழில்படிப்பு கல்வி நிலையங்களில் ஒன்றான பட்காம் ஐடிஐ-
யில் ஆட்டோமொபைல் பராமரிப்புப் பயிற்சி மிகச்சிறந்த முறையில்
அளிக்கப்படுகிறது. இங்கு பயின்றவர்களுக்கு நான் சான்றிதழ்களை வழங்கினேன்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் பெண்கள். இவர்களுடன்
உரையாடியபோது இந்த மாவட்டத்தில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள்
தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைவதற்கு சாத்தியம் உள்ளதா என்று அவர்கள்
வினவினர், அப்போதுதான் தாங்கள் பெற்ற பயற்சிக்கான வேலைவாய்ப்பைப்
பெறமுடியும் என்று அவர்கள் கூறினர்.
வேலைவாய்ப்புக்கு நுழைவாயிலாக இருப்பது திறன் மேம்பாடு என்ற பிரதமர்
நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நான் அவர்களுடன்
பகிர்ந்துகொண்டேன். இதனைக் கேட்ட அந்த மாணவிகள் உண்மையில்
உற்சாகமடைந்தனர். மற்ற மாநிலங்களில் நான் பயணம் செய்தபோது இளைஞர்கள்
விரும்பியது போல தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சேர்ந்து முன்னேற வேண்டும்
என்ற விருப்பத்தை இவர்களும் வெளிப்படுத்தினர்.
கடந்த 75 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் நீடித்த பிரச்சனையை நமது பிரதமர்
நரேந்திர மோடி களைந்ததால் இத்தகைய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. மக்களின்
பாதுகாப்புக்காக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகமும், காவல் துறையும், பாதுகாப்பு
படைகளும் 24 மணி நேரமும் முயற்சி செய்கின்றன; சேவை புரிகின்றன; தியாகம்
செய்கின்றன.
ஏற்கெனவே ஜம்மு-காஷ்மீர் மூன்று நிலப்பிரபுத்துவ குடும்பங்களால்
கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது முழுமையாக நரேந்திர மோடியின் நிர்வாகமும்
அவரது 77 அமைச்சர்களும் ஜம்மு-காஷ்மீரில் அனைத்து மக்களின் சிறந்த
எதிர்காலத்திற்காக பாடுபடுகிறோம்.
(கட்டுரையாளர் – மத்திய தொழில்நுட்பம் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை
இணையமைச்சர்)
பத்திரிகை தகவல் அலுவலகம்
இந்திய அரசு
சென்னை