கர்மயோகி மோடி – 135 கோடி இந்தியர்களுக்கு ஓர் ஊக்கசக்தி பியூஷ் கோயல்

Loading

20 ஆண்டுகளுக்கு முன் காந்திநகரிலிருந்து தமது சிறப்பு மிக்க நிர்வாகப் பயணத்தைப் பிரதமர்
நரேந்திர மோடி தொடங்கினார். முதலில் குஜராத் மக்களுக்கு அவர் தன்னலமின்றி சேவை
செய்தார். 2014 முதல் நமது நாட்டிற்கு சேவை செய்கிறார். காந்தி நகருக்கு அருகே உள்ள
வாட் நகரில் அவர் பிறந்தார். மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு சிறு
நகரம் அது. இது போன்ற இடையூறுகளை எதிர்கொண்டு வளர்ந்த அவர் ஒரு மாற்றத்தைக்
கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார், எனவே தம்மைப்போல் எந்தவொரு குழந்தையும்
தெருவிளக்கின் கீழ் படிக்கவோ தேநீர் விற்கவோ கூடாது என்று அவர் நினைத்தார்.
சேவையும் அர்ப்பணிப்பும் என்பதான பிரதமர் மோடியின் பயணம் 17வது வயதில்
தொடங்கியது. பின்னர் அவர் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பயணம் செய்ய வீட்டை
விட்டு புறப்பட்டார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பிரச்சாரகராக பயிற்சிபெற்றது அவருக்கு
பாரதத்தை பற்றியும் இந்திய மக்கள் பற்றியும் அறிந்துகொள்ளும் தனித்துவ வாய்ப்பை
அளித்தது. ஓய்வின்றி எல்லா நாட்களிலும் உழைத்த பிரதமர் மோடி தலைவராக
உருவெடுத்தார்.
வானத்தைத் தொடும் கோபுரத்தை கட்டமைக்க முதலில் வலுவான அடித்தளம்
இன்றியமையாதது, அதையே பிரதமர் மோடி கடைப்பிடித்தார். ‘அனைவரும் இணைவோம்,
அனைவரும் உயர்வோம், அனைவரையும் ஒருங்கிணைப்போம், அனைவரும் முயற்சி
செய்வோம்’ என்பது அவரின் வழிகாட்டும் தத்துவமாக இருக்கிறது.
இந்தியாவின் பிரச்சனைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகளை நன்கு அறிந்திருந்தபோதும்
மற்றவர் கருத்துக்களுக்கு நன்கு செவிமடுக்கும் குணம் கொண்டவர் பிரதமர் மோடி.
பின்னூட்ட கருத்துக்களை அறியவும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைத்
தெரிந்துகொள்ளவும் அவர் எப்போதும் திறந்தமனதுடன் இருப்பார். தொழில்நுட்பத்தை
பயன்படுத்தும் அவரது நிர்வாகம் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவந்துள்ளது.
ஒன்றன் பின் ஒன்றாக அமலாக்குவதற்கு கவனம் செலுத்தப்படும் திட்டங்களிலிருந்து பிரதமர்
மோடியின் இந்தியாவிற்கான நீண்ட கால தொலைநோக்கு பார்வையை எளிதாகப்
புரிந்துகொள்ள முடியும். ஜன்தன் கணக்குகள், ஆதார், நேரடிப் பயன் பரிமாற்றம், டிஜிட்டல்
முறையிலான பணப் பரிவர்த்தனைகள், ஆயுஷ்மான் பாரத் மூலம் 50 கோடி இந்தியர்களுக்குக்
கட்டணமில்லா சுகாதார வசதி போன்றவை இல்லாதிருந்தால் கொவிட்-19
நோய்த்தொற்றினை எதிர்கொள்வதை நாம் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? முன்
எப்போதும் கண்டிராத ஒரு தருணத்தில் உரிய நேரத்தில் நலத்திட்டங்கள் கிடைப்பதற்கான
அடிப்படையாக இவற்றின் வெற்றிகரமான அமலாக்கம் இருந்தது.
கர்மயோகியாகப் பணியாற்றும் பிரதமர் மோடியின் வாழ்க்கை, இந்தியர்கள் அனைவருக்கும்
ஓர் ஊக்கசக்தியாகும். ‘தேநீர் விற்பனை என்பதிலிருந்து பிரதமர் வரை’ என்ற அவரது பயணம்
கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் எதையும் சாத்தியமாக்கும் என்பதற்கு உதாரணமாகும்.
தற்போது புதிய இந்தியாவைக் கட்டமைக்க அர்ப்பணிப்புடன் சேவை என்பதைக்
கடைப்பிடிப்பது 135 கோடி இந்தியர்களின் கடமையாகும்.

(கட்டுரையாளர் – மத்திய தொழில் வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும்
பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சர்)

0Shares

Leave a Reply