இன்றைய ராசி பலன்: செவ்வாய்க்கிழமை அக்டோபர் 12, 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன்: செவ்வாய்க்கிழமை அக்டோபர் 12, 2021
சென்னை: பிலவ வருடம் புரட்டாசி 26 ஆம் தேதி அக்டோபர் 12,2021 செவ்வாய்க்கிழமை. சப்தமி திதி இரவு 09.48 மணி வரை அதன் பின் அஷ்டமி திதி. மூலம் பகல் 11.26 மணிவரை அதன் பின் பூராடம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக பேசவும். வேலையில் விழிப்புணர்வும் கவனமும் தேவை.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் மேற்கொள்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்கள் வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். மற்றவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் படிப்படியாக குறையும். எந்த விஷயத்திலும் பொறுமையுடனும், கவனமுடனும் இருப்பது நல்லது. வியாபார சம்பந்தமான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் பிரச்சினைகள் குறையும். உடல்நிலை சீராகும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சுப காரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். பொன் பொருள் சேரும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்ப உறவுகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருப்பதால் நிதி நெருக்கடிகள் நீங்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வங்கி சேமிப்பு உயரும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். வேலை விசயமாக வெளியூர், செல்லும் வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.