இன்றைய ராசி பலன் சனிக்கிழமை அக்டோபர் 09, 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் சனிக்கிழமை அக்டோபர் 09, 2021
சென்னை: பிலவ வருடம் புரட்டாசி 23 ஆம் தேதி அக்டோபர் 09,2021 சனிக்கிழமை. திருதியை திதி காலை 07.49 மணி வரை அதன் பின் சதுர்த்தி திதி. விசாகம் மாலை 04.47 மணிவரை அதன் பின் அனுசம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். காலை 11 மணிக்கு மேல் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. மேஷம் முதல் மீனம் வரை 17 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு வருகிறார். காலை 11 மணிக்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வீண் பேச்சுக்களை பேச வேண்டாம். பணம் விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரப்படுத்தவும்.
ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நன்மை ஏற்படும். இன்று நீங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் மனைவி இடையே பிரச்சினை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
மிதுனம்
சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக வராத பணம் இன்று வசூலாகும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளால் ஏற்பட்ட வீண் பிரச்சினைகள் நீங்கும்.
சிம்மம்
சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் வரும் வரைக்கும் பணத்தை சிக்கனமாக செலவு செய்தால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம்.
கன்னி
சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசனும் ஊதிய உயர்வும் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திடீர் பணவரவு வரும். வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
துலாம்
சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய உடல்நிலையில் ஏற்பட்டிருந்த சோர்வும், மந்தநிலையும் நீங்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு சற்று குறைந்து காணப்படும். வீண் பயணங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்குள் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் பணவரவும் லாபமும் அதிகரிக்கும். வீண் விரைய செலவுகளை தவிர்க்கவும் சுப செலவுகள் செய்யலாம். செய்யும் தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வேலைபளு குறையும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். திடீர் பண வரவும் உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.விரைய செலவுகளை தவிர்க்கவும். சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் தீரும்.
மகரம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு காலையிலேயே நல்ல செய்தி தேடி வரும். மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும்.
கும்பம்
சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். ஆலய தரிசனம் செய்வீர்கள்.
மீனம்
சந்திரன் உங்க ராசிக்கு காலை வரை எட்டாம் வீட்டிலும் 11மணிக்கு மேல் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கடன் வாங்குவதைத் தவிர்க்க இன்றைய தினம் வீண் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளவும்.