பழனி கோவிலுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி இந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

பழனி கோவிலுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி இந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கோவில்களில் வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் பக்தர்களை அனுமதிக்க தமிழகஅரசு தடை விதித்துள்ளது.இதனை கண்டித்து இன்று பழனியில் இங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பழனி கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்காததால் பழனியில் உள்ள வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக வியாபாரிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும்‌ மதுபானக்கூடங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், தனியார் மதுக்கூடங்கள் பூங்காக்கள் திறக்கப்பட்ட்டுள்ள நிலையில் கோவிலுக்கு மட்டும் அனுமதி அளிக்காதது ஏன் என்றும்? குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடாத நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதித்துள்ள நிலையில் கோவில்களை மட்டும் அனுமதி அளிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். எனவே கோவில்களை வாரம் முழுவதும் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். வியாபாரிகள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply