இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை அக்டோபர் 08 , 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை அக்டோபர் 08 , 2021
சென்னை: பிலவ வருடம் புரட்டாசி 22 ஆம் தேதி அக்டோபர் 08,2021 வெள்ளிக்கிழமை. துவிதியை திதி பகல் 10.49 மணி வரை அதன் பின் திருதியைத் திதி. சுவாதி மாலை 06.59 மணிவரை அதன் பின் விசாகம் நட்சத்திரம். சந்திரன் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். மீனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. சுக்கிரன் ஆசிகள் நிறைந்த வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்வது என்று பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மனதில் காதல் நினைவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் வீடு தேடி வரும் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். மன அமைதி இருக்கும்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.
சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும் என்றாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வழியாக உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும்.
துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.
விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
தனுசு
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். சேமிப்பு உயரும்.
மகரம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கும்பம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும். வீண் செலவுகள் செய்வீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.