பேரணாம்பட்டு மக்கள் மனதில் இடம் பிடித்த காவல் உதவி ஆய்வாளர்.
வேலூர் செப்டம்பர் 27
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் சிறப்பாக பணியாற்றி பேரணாம்பட்டு மக்கள் இடையே நன்மதிப்பை பெற்றவர் இவர் கொரோனா காலகட்டத்தில் நோய் தொற்று அதிக அளவில் பரவிக் கொண்டிருந்த பொழுது பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நோய் தொற்று அதிக அளவில் பரவி விடக்கூடாது என்ற எண்ணத்தில் இரவு பகல் பாராது ரோந்து பணியில் ஈடுபட்டு நோய் தொற்று பரவலை பற்றி விரிவாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தார் அதேபோல் பேரணாம்பட்டு பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தார் மற்றும் விழாக்காலங்களில் அனைத்து சமுதாயத்தினரிடம் நல்லிணக்கத்துடன் செயல்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார் பேரணாம்பட்டு பகுதியில் கள்ளச்சராயத்தை ஒழித்தார் இவ்வாறு செயல்பட்ட வந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் சில மாதங்களுக்கு முன்பு மாறுதலாகி குடியாத்தம் காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்து சென்றார் அங்கு சில மாதங்கள் பணிபுரிந்து வந்த நிலையில் மீண்டும் பேரணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளராக சிலம்பரசன் பொறுப்பு ஏற்று கொண்டார் இதனை பேரணாம்பட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.