Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை செப்டம்பர் 16, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை செப்டம்பர் 16, 2021

சென்னை: பிலவ வருடம் ஆவணி 31 ஆம் தேதி செப்டம்பர் 16,2021 வியாழக்கிழமை. தசமி காலை 09.36 மணிவரை அதன் பின் ஏகாதசி திதி. உத்திராடம் மறுநாள் விடிகாலை 04.08 மணி வரை அதன் பின் திருவோணம். சந்திரன் இன்றைய தினம் மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். இசந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. இன்று குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படும். சுப செலவுகள் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செலவு செய்வதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். ன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது உத்தமம்.

மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உணவு விசயத்தில் கவனமும் நிதானமும் தேவை.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் கடன்கள் குறையும். குரு பார்வையால் குதூகலம் ஏற்படும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சுபகாரியங்கள் கைகூடி வரும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் ஏற்பட்ட வீண் விரய செலவுகள் முடிவுக்கு வரும். வீடு பராமரிப்பு செலவு வரும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சல் வரலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களில் நிதானம் தேவை.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திடீர் பண வரவு வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்கள் உறவினர்களால் நன்மைகள் உண்டாகும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கடந்த சில நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மந்தநிலை மாறி சுறுசுறுப்பு அதிகரிக்கும். மனநிலை தெளிவாகும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சனி, குரு உடன் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க முயற்சி செய்யலாம்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் எதிர்கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வேலை விசயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *