காகிதமில்லா காவல் நிர்வாகம் புதிய சாப்ட்வேரில் மனுக்கள் பதிவு. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தகவல்.
சிவகங்கை செப்டம்பர் 15
காகிதமில்லா காவல் நிர்வாகம் புதிய சாப்ட்வேரில் மனுப்பதிவு மூலம் மனுதாரர்கள் நேரடியாக வழங்கும் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணும் விதமாக மக்கள் குறைதீர் திட்ட சாப்ட்வேர் அறிமுக கூட்டம் சிவகங்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் தலைமை ஏற்று பேசியதாவது “2021 ஜனவரி முதல் செப்டம்பர் 14 வரை
நான் நேரடியாகப்பெற்ற 2,241 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது”
என்றும்
“காவல் நிலையங்களில் பெறப்பட்ட 13,326 மனுக்களில் 12,760 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது; எஞ்சிய மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றுவருகிறது”, என்றும் பேசினார்
மேலும் காகிதமில்லா நிர்வாகம் கொண்டுவரும் நோக்கில் மக்கள் வழங்கும் மனுக்களை கணினியில் பதிவு செய்து புதிய மென்பொருள் மூலம் உரிய காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும் என்றும் மனுவில் விசாரணை அலுவலரின் பெயர் அவருடைய அலைபேசி எண் இருக்கும் என்றும் மனுதாரர்கள் அன்று விசாரணை அலுவலரை சந்தித்து தீர்வு காணலாம்” என்றும் தெரிவித்தார்.
மேலும்
காகித வழிவரும் மனுக்கள் என்னிடமிருந்து காவல்துறை கண்காணிப்பாளர் வழியாக காவல் ஆய்வாளர்களுக்கு செல்வதன் மூலம் விசாரணையில் ஏற்படும் காலதாமதம் ஏற்பட்டுவருகிறது.
இக்காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டே என்னிடம் தரும் மனுக்களை உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம்செய்து புதிய மென்பொருள் செயலி மூலமாக காவல் நிலையங்களுக்கு நேரடியாக அனுப்பப்படவுள்ளது”,
என்றும்
“இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கும் இத்திட்டம் விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்
மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் முரளிதரன், வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் கோடீஸ்வரன், சைபர் கிரைம் தனிப்படை காவல் ஆய்வாளர் சபரிராஜன் உட்பட அனைத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.