மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த நபர் கைது.

Loading

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த நபர் கைது

சூளைமேடு பகுதியில் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம்
பெற்று மோசடி செய்த நபரை பணம் கேட்டபோது தகாத வார்த்தைகளால்
பேசியதால் பாதிக்கப்பட்டவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட
வழக்கில் மோசடி நபர் கைது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த
பாலகிருஷ்ணன், வ/29, த/பெ.பாண்டியன் என்பவர் சுமார் 1 ½ வருடங்களுக்கு முன்பு
பொறியியல் படிப்பு முடித்து வேலை தேடி கொண்டிருந்தபோது, அவரது நண்பர் செல்வகுமார்
என்பவர் மூலம், சென்னை, சூளைமேட்டில் வசிக்கும் பழனிகுமார் என்பவர் மின்வாரியத்தில்
வேலை வாங்கி தருவதாக கூறி அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பேரில், பழனிகுமார்
மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ரூபாய் 23 லட்சம்செலவாகும் எனக்
கூறியதை நம்பி பாலகிருஷ்ணன் ரூ.23 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் பழனிகுமார்
கூறியபடி வேலை வாங்கி தராததால், பாலகிருஷ்ணன் அவரிடம் பணம் கேட்டு வந்த
நிலையில் ரூ.13 லட்சம் திரும்பி தந்துள்ளார். மீதம் தர வேண்டிய பணம் ரூ.10 லட்சத்தை
தராமல் பழனி குமார் ஏமாற்றி வந்த நிலையில், பாலகிருஷ்ணன் நேற்று (10.9.2021) காலை,
சூளைமேட்டில் உள்ள பழனிகுமார் வீட்டிற்கு சென்று அவருக்கு தர வேண்டிய ரூ.10 லட்சம்
பணத்தை தரும்படி கேட்டுள்ளார்.
ஆனால் பழனிகுமார் தகாத வார்த்தைகளால் பேசியதால் மனமுடைந்த பாலகிருஷ்ணன்
தான் ஏற்கனவே மறைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ
வைத்துக் கொண்டார். உடனே பழனிகுமார், பாலகிருஷ்ணன் உடல் மீது பற்றிய தீயை
அணைத்து, மருத்துவமனையில் சேர்த்ததின்பேரில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று
(10.9.2021) மதியம் சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இது குறித்து F-5 சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வேலை
வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததுடன், தகாத வார்த்தைகளால் பேசி
தற்கொலைக்கு தூண்டியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி பழனிகுமார்,
வ/59, த/பெ.முருகேசன், எண்.53, கில்நகர் 2வது தெரு, சூளைமேடு, சென்னை என்பவரை
கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் எதிரி பழனிகுமார் நேற்று (10.9.2021) நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், தலைமறைவாகவுள்ள மற்றொரு எதிரியான செல்வகுமார் என்பவரை பிடிக்க
காவல் குழுவினர் விரைந்துள்ளனர்.

0Shares

Leave a Reply