6 லட்சம் மதிப்புள்ள சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல்…. கேரளாவை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது…
கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு மற்றும் கஞ்சா விற்பனைக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் தீவிர நடவடிக்கைள் மேற்கொண்டு வருகிறார். மேற்படி அனைத்து காவலர்களுக்கும் போதை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. திருமுருகன், உதவி ஆய்வாளர் திரு. சத்திய சோபன் ஆகியோர் தலைமையில் போலீசார் இரவு ஒழுகினசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் பைக்கை திருப்பி வேகமாக சென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், விரட்டி சென்று அப்டா மார்க்கெட் பகுதியில் வைத்து பிடித்து சோதனை நடத்தியதில் அவர்களிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஷ்ணு பிரகாஷ்(22) மற்றும் அகில் ஜெயன்( 26), என்பதும், தேனியில் இருந்து கஞ்சாவை வாங்கி குமரி மாவட்டத்தில் விற்க முயன்றது தெரியவந்தது. பின்பு அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் வரை இருக்கும். அதிரடியாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்…