Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை செப்டம்பர் 08, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை செப்டம்பர் 08, 2021

சென்னை: பிலவ வருடம் ஆவணி 23 ஆம் தேதி செப்டம்பர் 08,2021 புதன்கிழமை. துவிதியை பின்இரவு 02.34 மணிவரை அதன் பின் திருதியைத் திதி. உத்திரம் பகல் 03.55 மணி வரை அதன் பின் ஹஸ்தம். சந்திரன் இன்றைய கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. புதன்பகவான் ஆசி நிறைந்த புதன்கிழமையான இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் வருகையால் நன்மைகள் நடைபெறும். பெண்கள் சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு நன்றாக இருக்கும்.

ரிஷபம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் ஏற்படும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடலில் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகவே கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை ஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்

கடகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய செயல்களை தொடங்க அனுகூலமான நாளாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.

சிம்மம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் திடீர் செலவுகள் ஏற்படும் வங்கி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை ஓரளவு குறையும். புதிய செயல்கள் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.

கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண சுப காரிய முயற்சிகள் தொடங்க நல்ல நாளாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின் அறிவுத் திறமையால் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினை குறையும். எதிர்பாராத உதவி தேடி வரும்.

விருச்சிகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் தேடி வரும். வீண் செலவுகள் குறையும்.

தனுசு
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும். புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கொடுத்த கடன் தங்கு தடையின்றி வசூலாகும். பண சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். இன்று உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்கள் விலகும். பிள்ளைகளால் ஏற்பட்ட வீண் செலவுகள் நீங்கும். பெண்களுக்கு வீட்டில் மதிப்பு மரியாதை நீங்கும். வேலைபளு குறையும். குவியாபாரத்தில் உள்ள மந்த நிலை குறையும் லாபம் அதிகரிக்கும்.

கும்பம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் அதிகரிக்கும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *