Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் சனிக்கிழமை செப்டம்பர் 04, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் சனிக்கிழமை செப்டம்பர் 04, 2021

சென்னை: பிலவ வருடம் ஆவணி 19 ஆம் தேதி செப்டம்பர் 04,2021 சனிக்கிழமை. துவாதசி காலை 08.24 மணி வரை அதன் பின் திரயோதசி திதி. பூசம் மாலை 05.45 மணி வரை அதன் பின் ஆயில்யம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்

மேஷம்
சந்திரன் இன்று நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் வெற்றி தரும்.

ரிஷபம்
சந்திரன் இன்று மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். திருமண முயற்சிகளில் இருந்த மந்த நிலை நீங்கி அனுகூலப்பலன் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும் வங்கி சேமிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்
சந்திரன் இன்று இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனத்துடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் உதவி கிடைக்கும்.

கடகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபமும் முன்னேற்றமும் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் பண வரவு அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் அமைதி ஏற்படும். உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலை செய்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். பெரியோர்களின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

துலாம்
சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் தேடி வரும். உங்களின் மனமகிழ்ச்சி அதிகரிக்கும், பெண்கள் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பயணங்களால் நன்மைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் குறையும். பணவரவு நன்றாக இருக்கும்.

தனுசு
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு வருகிறார். இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்
சந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்சியை கொடுக்கும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்
சந்திரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வீண் செலவுகளை கட்டுப்படுத்தவும். கொடுத்த கடன்கள் வசூலாகும். நிதி பிரச்சினைகள் நீங்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்களின் ஆதரவு மன நிம்மதியை தரும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *