திராவிட களஞ்சியம் என பெயர் சூட்டுவதா?- சீமான் கண்டனம்

Loading

பழந்தமிழ் இலக்கியங்களை, ‘திராவிடக் களஞ்சியம்’ என அடையாள மாற்றம் செய்ய முயலும் தி.மு.க. அரசின் செயல் தமிழினத்திற்கு எதிரான செயல் ஆகும்.

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சங்கத்தமிழ் இலக்கியங்களை தொகுத்து அவற்றிற்கு ‘திராவிடக் களஞ்சியம்’ எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது.

தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, ‘திராவிடக் களஞ்சியம்’ என அடையாள மாற்றம் செய்ய முயலும் தி.மு.க. அரசின் செயல் தமிழினத்திற்கு எதிரான செயல் ஆகும்.

சங்க இலக்கியங்களிலோ, பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ எங்கும் குறிக்கப்பெறாத ‘திராவிடம்’ எனும் திரிபுவாத சொல்லை கொண்டு தமிழ் களஞ்சியங்களை குறிப்பிடுவது வெட்கக்கேடானது.

எனவே, சங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக் களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் போக்கை உடனடியாக கைவிட்டு, அவற்றை ‘தமிழ்க் களஞ்சியம்’ என்றே குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *