Today’s Rasi Palan :இன்றைய ராசி பலன் திங்கட்க்கிழமை ஆகஸ்ட் 30, 2021

Loading

Today’s Rasi Palan :இன்றைய ராசி பலன் திங்கட்க்கிழமை ஆகஸ்ட் 30, 2021

சென்னை: பிலவ வருடம் ஆவணி 14 ஆம் தேதி ஆகஸ்ட் 30,2021 திங்கட்க்கிழமை. அஷ்டமி இரவு 02.00 மணி வரை அதன்பின் நவமி திதி. கார்த்திகை நட்சத்திரம் காலை 06.38 மணி வரை ரோகிணி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. சந்திரன் ஆதிக்கம் நிறைந்த திங்கட்க்கிழமையான இன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வரும்

ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் முலம் சுபசெய்திகள் கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிட்டு

மிதுனம்
சந்திரன் இன்று விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கடன்கள் சற்று குறையும். எதிலும் நிதானம் தேவை.

கடகம்
சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.

சிம்மம்
சந்திரன் தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும்.

கன்னி
சந்திரன் ஒன்பதாம வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வரவிற்கேற்ப செலவுகள் இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் நிம்மதியை தரும்.

துலாம்
சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

விருச்சிகம்
இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். சந்திரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சொத்து வாங்க நல்ல நாள். மனதில் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.

தனுசு
சந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். குடும்பத்தில் திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

மகரம்
சந்திரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார ரீதியான செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

கும்பம்
சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக கூட்டாளிகளுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்
சந்திரன் முயற்சி ஸ்தானமான 3வது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் கடினமான காரியங்களை கூட எளிதில் முடித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன் கிடைக்கும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *