Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் சனிக்கிழமை ஆகஸ்ட் 28, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் சனிக்கிழமை ஆகஸ்ட் 28, 2021

சென்னை: பிலவ வருடம் ஆவணி 12 ஆம் தேதி ஆகஸ்ட் 28,2021 சனிக்கிழமை. சஷ்டி இரவு 08.57 மணி வரை அதன்பின் சப்தமி திதி, பரணி இரவு 03.34 மணி வரை அதன் பின் கார்த்திகை நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார். சிந்தனை தெளிவாக இருக்கும். சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து உயரும். தனிச்சிறப்பாக வேலை இருக்கும். குடும்பத்தினர் உங்களின் சொல் கேட்டு நடப்பார்கள். காரிய வெற்றி நடைபெறும் நாள். நீண்ட நாட்களாக வராத பணம் வரும். பெண்கள் மூலம் மேன்மை ஏற்படும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்.

ரிஷபம்
சந்திரன் 12ஆம் வீட்டில் மறைந்திருப்பதால் வெளிநாடு யோகம் கை கூடி வரும் பொருளாதார மேன்மை ஏற்படும். கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் நீங்கும். மனக்குறைகள் நீங்கும். செயல்களில் தெளிவு பிறக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்
சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். சகோதர வகையில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கடகம்
ராசிநாதன் சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் தொழிலில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். பெண்களுக்கு சிறப்பான நாள். புதிய முயற்சிகள் கை கூடி வரும். விருப்பம் நிறைவேறும். புதிய காதல் உருவாகும். காதலிப்பவர்களுக்கு சிறப்பான நாள் திருமணம் கை கூடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும்.

சிம்மம்
பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். வம்பு வழக்குகள் நீங்கும். எதிரிகள் தொல்லை முடிவுக்கு வரும். வேலை தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். விரையாதிபதி பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் விரைய செலவுகள் முடிவுக்கு வரும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையேயான சிக்கல்கள் முடிவுக்கு வரும்.

கன்னி
சந்திரன் எட்டாம் வீட்டில் மறைவதால் மன குழப்பம் அதிகரிக்கும். சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். வங்கி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. பண விவகாரங்களில் விழிப்புணர்வு தேவை. வெளியிடங்களில் வீண் வாக்குவாதம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் தேவை.

துலாம்
சந்திரன் சுபமான நிலையில் ஏழாம் வீட்டில் இருப்பதால் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஏதேனும் ஒரு விசயத்தில் சாதிப்பீர்கள். காதல் விவகாரங்கள் கை கூடி வரும். சந்திரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் உறவுகள் மேம்படும். இன்று முக்கியமான நபரின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும்.

விருச்சிகம்
சந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். வீடு கட்ட தொழில் ஆரம்பிக்க கடன் வாங்கலாம். ஆறாம் வீடு ருண ரோக சத்ரு ஸ்தானம் இந்த இடத்தில் சந்திரன் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். வாய்ப்புகள் கை கூடி வரும் நாளாகும்.

தனுசு
சந்திரன் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்பவர்களுக்கு உயர்பதவிகள் தேடி வரும். பிள்ளைகளால் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தலைமைப் பதவிகள் தேடி வரும். வேலையில் இருந்து வந்த மன அழுத்தங்கள் நீங்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நன்மைகள் அதிகம் நடைபெறும் நாளாகும்.

மகரம்
நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். வீடு வாகனத்தில் மேன்மை கிடைக்கும். உடல் பொலிவடையும் நோய் தொந்தரவுகள் நீங்கும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பண வரவுகள் அதிகரிக்கும். வீட்டுக்கடன்கள் நீங்கும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். முன்னேற்றகரமான நாளாகும்.

கும்பம்
தைரிய வீரிய ஸ்தானமான மூன்றாவது வீட்டில் சந்திரன் பயணம் செய்கிறார். வெற்றிகள் தேடி வரும் நாளாகும். தொழிலில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். வேலையில் இருந்து வந்த மனக்குறை நீங்கும். அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும் வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் நன்மை ஏற்படும். இன்று வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *