Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 27 , 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 27 , 2021
சென்னை: பிலவ வருடம் ஆவணி 11 ஆம் தேதி ஆகஸ்ட் 27,2021 வெள்ளிக்கிழமை. பஞ்சமி மாலை 06.49 மணி வரை அதன்பின் சஷ்டி திதி, அசுவினி இரவு 12.47 மணி வரை அதன் பின் பரணி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக செய்யும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண வரவு அதிகரித்தாலும் செலவுகளும் கூட வரும். இன்று உடல்நிலையில் ஏற்பட்டிருந்த சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தையில் நல்ல செய்தி தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை மேலோங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார முன்னேற்றத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சந்தோஷம் அதிகரிக்கும் நல்ல செய்தி தேடி வரும். உடல் நலம் நன்றாக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய பணம் கைக்கு தேடி வரும். வங்கி சேமிப்பு உயரும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணவரவு நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் உதவி கிடைக்கும்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேலையில் கவனம் தேவை. தொழில் ரீதியாக இன்றைய தினம் பெரிய அளவில் பண முதலீடுகள் செய்ய வேண்டாம். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது.
துலாம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நல்ல செய்தி வீடு தேடி வரும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் வரும். சந்திரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வராத பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். செய்யும் தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும்.
தனுசு
சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பணவரவு நன்றாக இருக்கும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நட்பு உண்டாகும்.
மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும் எதையும் எளிதில் சமாளிப்பீர்கள். ஆலய வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு நீங்கும். முடிந்த வரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்ப விசயங்களில் யாரையும் தலையிட விட வேண்டாம்.
கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் நன்மை ஏற்படும். இன்று வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.