Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை ஆகஸ்ட் 26, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன்

சென்னை: பிலவ வருடம் ஆவணி 10 ஆம் தேதி ஆகஸ்ட் 26,2021 வியாழக்கிழமை. சதுர்த்தி மாலை 05.14 மணி வரை அதன்பின் பஞ்சமி திதி, ரேவதி நட்சத்திரம் இரவு 10.29 மணி வரை அதன் பின் அசுவினி நட்சத்திரம்.
சந்திரன் இன்றைய தினம் மீன ராசியில் பயணம் செய்கிறார். இரவு 10 மணிக்கு மேல் மேஷ ராசிக்குள் நுழைகிறார். இரவு வரை சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் உணவு விசயத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவருமானம் அதிகரிக்கும். நல்லவை அதிகம் நடைபெறும் நாள். குடும்பத்தில் சுப காரியம் நடைபெற வாய்ப்பு கைகூடி வரும்.

ரிஷபம்
லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சந்திரனால் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். வராத பழைய கடன்கள் வசூலாகும். வங்கி சேமிப்பு உயரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். திருமணம் சுப காரிய முயற்சிகளில் வெற்றிகள் தேடி வரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான நிலை ஏற்படும். வேலையில் கவனம் தேவை.

மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் உதவியும் மகிழ்ச்சியை அளிக்கும். கடந்த சில நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கையும் மணவாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் கவனம் தேவை. தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். எதிர்பாராத உதவிகள் கிட்டும். காதல் விவகாரங்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.மண வாழ்க்கை மகிழ்ச்சியை தரும். ஆலய வழிபாடு மன நிம்மதியைக் கொடுக்கும்.

சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். மவுன விரதம் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கன்னி
சந்திரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. இன்று அற்புதமான நாள். பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். ராசிக்கு எட்டாம் வீட்டில் உள்ள ராகுவினால் திடீர் செலவுகள் வரும். குடும்பத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கும்.

விருச்சிகம்
சந்திரன் சஞ்சாரம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ளது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஊழியர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் உதவியால் கடன் சுமை ஓரளவு குறையும். மண வாழ்க்கை காதல் விவகாரங்கள் உற்சாகத்தைத் தரும். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு
நான்காம் வீட்டில் உள்ள சந்திரனால் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் யோசித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். மருத்துவ செலவுகள் வரும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் இருக்கிறார். இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்க நல்ல நாள்.

கும்பம்
இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சந்திரன் பயணம் செய்கிறார். உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். லாபத்தில் உள்ள சனியால் வருமானம் கூடும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். விரைய குருவினால் செலவுகள் வரவுக்கு மீறி இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாக சிக்கனமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும்.

மீனம்
உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். நிம்மதியும் உற்சாகமும் பிறக்கும்.குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *