Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 22, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 22, 2021

சென்னை: பிலவ வருடம் ஆவணி 06 ஆம் தேதி ஆகஸ்ட் 22,2021 ஞாயிற்றுக்கிழமை . பௌர்ணமி மாலை 05.32 மணி வரை அதன்பின் பிரதமைத் திதி. அவிட்டம் இரவு 07.39 மணி வரை அதன் பின் சதயம். சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். வீட்டில் இன்றைய உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் வீடு தேடி வரும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். மன அமைதி உண்டாகும். கடந்த 2 நாட்களாக ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும் மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத திடீர் பணவரவு வந்து திக்குமுக்காட வைக்கும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வண்டி வாகனங்கள் பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுத்த காரியம் வெற்றி அடையும். உறவினர்களிட் ஏற்பட்டிருந்த போட்டி பொறாமைகள் நீங்கும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். வங்கி சேமிப்பு உயரும். புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சி செய்யலாம்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்பட்டு மன உளைச்சலை உண்டாக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக அனுகூலப்பலன் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். புதிய முயற்சிகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். இன்று உங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண வரவு அதிகரிக்கும் அதற்கேற்ப செலவுகளும் தேடி வரும். உடலில் ஏற்பட்ட சிறு உபாதைகள் மறையும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேற உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *