Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 11, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 11, 2021

சென்னை: பிலவ வருடம் ஆடி 26 ஆம் தேதி ஆகஸ்ட் 11,2021, புதன்கிழமை, திருதியைத் திதி மாலை 04.54 மணி வரை அதன் பின் சதுர்த்தி திதி. பூரம் காலை 09.31 மணி வரை அதன் பின் உத்திரம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார். மகரம் ராசிக்காரர்களுக்கு பிற்பகல் வரையிலும் சந்திராஷ்டமம் உள்ளது. கும்ப ராசிக்காரர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம் சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் திடீர் பண வரவு வரும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும். கடன் பிரச்சினைகள் நீங்கும். இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

ரிஷபம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் துணிச்சலுடன் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். இன்று மன நிம்மதி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும்.

கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் அனுகூலப் பலன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். இன்று உறவினர்கள் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி
சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கைகூடும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். மனதில் திடீர் கவலைகள் உருவாகும். வேலையில் கவனம் தேவை.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்களுடைய உடலில் சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாகுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வீண் பிரச்சினைகளை தவிர்க்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் உண்டாகும் கவனம் தேவை.

கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களிடையே பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வீண் சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபகாரியங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் கவனம் தேவை.

மீனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனரீதியான உடல் ரீதியான பிரச்சினைகள் நீங்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *