Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 11, 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 11, 2021
ஜோதிடம்
சென்னை: பிலவ வருடம் ஆடி 26 ஆம் தேதி ஆகஸ்ட் 11,2021, புதன்கிழமை, திருதியைத் திதி மாலை 04.54 மணி வரை அதன் பின் சதுர்த்தி திதி. பூரம் காலை 09.31 மணி வரை அதன் பின் உத்திரம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார். மகரம் ராசிக்காரர்களுக்கு பிற்பகல் வரையிலும் சந்திராஷ்டமம் உள்ளது. கும்ப ராசிக்காரர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம். இன்று ஆடிப்பூரம் ஆண்டாள் வழிபாடு நன்மையைக் கொடுக்கும்
மேஷம்
சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பண வருமானம் கூடும். வங்கி சேமிப்பு உயரும். கடன் பிரச்சினை தீரும். இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் சுக ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரம் தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் நன்மைகள் நடைபெறும். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் சாதகமான இடத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
கடகம்
சந்திரன் குடும்ப ஸ்தானத்திலும் முயற்சி ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். நிதானத்தை கடைப்பிடிப்பதன் மூலம் விரயங்களை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியிலும் இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் நுழைகிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெண்களுக்கு பொன் பொருள் சேரும். வேலையில் கவனம் தேவை.
துலாம்
சந்திரன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் திடீர் செலவுகள் வரும். இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
விருச்சிகம்
சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் எடுத்த காரியம் எளிதில் முடியும். கொடுத்த கடன்கள் வசூலாகும். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
தனுசு
சந்திரன் சஞ்சாரத்தினால் உங்களுக்கு இன்று சில சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும் என்றாலும் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வேலைபளு குறையும்.
மகரம்
சந்திரன் பிற்பகல் வரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் பிற்பகல் 03.23 மணிவரை பேச்சில் நிதானம் தேவை. இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
கும்பம்
சந்திரன் பிற்பகல் வரை ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பிற்பகல் 03.23 மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமும் நிதானமும் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். செயல்களில் நிதானம் தேவை.
மீனம்
சந்திரன் பயணம் சாதகமான இடத்தில் உள்ளது. இன்று நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.