திருத்தணியில் இருளர் சான்றுகள் இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் முதியோர் ஓய்வூதிய ஆணைகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
திருவள்ளூர் ஆக 10 : தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பழங்குடியினர் இன சான்றுகள் இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியத்திற்க்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கி தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றாக கருதி அனைத்து விதமான
உதவிகளும் கிடைக்க போதுமான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்திற்கு உட்பட்ட பாப்பிரெட்டிபள்ளி காஞ்கிபாடி இராஜபத்மாபுரம் பெரியக்களகாட்டூர் கிராமங்களை சேர்ந்த 104 பழங்குடியின மக்களுக்கு இன சான்றுகளும் வி.கே.என்.கண்டிகை சூரிய நகரம் கிராமங்களை சேர்ந்த 20 பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும் தும்பிகுளம் கிராமம் மற்றும் சகவராஜபேட்டை கிராமங்களை சேர்ந்த 7 பழங்குடியின மக்களுக்கு முதியோர் ஓய்வூதியத்திற்க்கான ஆணைகளையும் வழங்குவதில்
பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இன சான்றுகள் அடிப்படையிலேயே பழங்குடியினர்களுக்கான கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார சலுகைகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதால் இன சான்றுகள் கிடைக்காத காரணத்தினால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் முன்னுரிமைகள் கிடைக்கபெறாமலே இதுவரையில் இருந்துள்ளனர். இதன் பொருட்டு பழங்குடியின மக்களுக்கு இன சான்றுகள் கிடைப்பதில் உள்ள இடர்பாடுகளை களைந்து உடனடியாக அவர்களுக்கான இன சான்றுகள் கிடைக்க வழிவகை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் பழங்குடியினர்களுக்கான இன சான்றுகள் வீட்டு மனை பட்டாக்கள் மற்றும் ஓய்வூதியங்கள் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக பயன்படுத்தி உங்களுக்கான சலுகைகள் மற்றும் முன்னுரிமைகளை பெற்று
வாழ்வில் முன்னேற்றம் பெற வேண்டும் பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.
இவ்விழாவில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் எம்.சத்யா திருத்தணி வட்டாட்சியர் ஜெயராணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.