Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்கிழமை ஆகஸ்ட் 10, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்கிழமை ஆகஸ்ட் 10, 2021

சென்னை: பிலவ வருடம் ஆடி 25 ஆம் தேதி ஆகஸ்ட் 10,2021, செவ்வாய்க்கிழமை, துவிதியைத் திதி மாலை 06.06 மணி வரை அதன் பின் திருதியைத் திதி. மகம் நட்சத்திரம் காலை 09.52 மணி வரை அதன் பின் பூரம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம் சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணவரவு சற்று சுமாராகத் தான் இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். வங்கி சேமிப்பு உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்

மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். நண்பர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். உத்தியோக ரீதியாக சிலருக்கு அன்னிய நாட்டிலிருந்து வேலை விசயமாக அழைப்புகள் வரலாம்.

கடகம் சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பாக உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அலட்சிய போக்கால் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுப செய்திகள் தேடி வரும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் புரிவோர்க்கு வெளியூர் தொடர்புகள் கிடைக்கும். திடீர் வருமானம் வரும் கூடவே சுப செலவுகளும் வரும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் கிட்டும். வருமானம் பெருகும் வங்கி சேமிப்பு உயரும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருக்கும். அரசு துறை சார்ந்தவர்களால் நன்மைகள் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் உதவி தேடி வரும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. இன்றைய நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விசயத்திலும் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்றைய தினம் நீங்கள் ஆலய வழிபாடு செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். நிதி நெருக்கடிகள் நீங்கும் பொருளாதாரம் நன்றாக இருக்கும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு அதிகாலையிலே நல்ல செய்திகள் தேடி வரும். மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *