இந்திய கைத்தறி தொழில், தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் நுணுக்கத்தின் கலவை திருமிகு ரினா தாகா, வடிவமைப்பாளர்,

Loading

இந்திய கைத்தறி தொழில், தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும்

நுணுக்கத்தின் கலவை

திருமிகு ரினா தாகா, வடிவமைப்பாளர், தில்லி

கோட்டா சேலைகள் நவநாகரிக உலகுக்கு இனப்பங்களிப்பாகும்.
அதன் நேர்த்தியான வடிவமைப்புகள் மற்றும் வகைகளுக்காக உலக
அளவில் அவை அங்கீகரிக்கப்பட்டவை. அதன் அசல் பூர்வீகம்
மைசூராகும். பண்டைக்காலத்தில், இந்த வகை சேலைகள், மைசூர்
நெசவாளர்களால் ராஜஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர்,
அவை மசூரியா மல்மல், கோட்டா-மசூரியா, கோட்டா காட்டன்,
கோட்டா டோரியா என பிரபலமடைந்தன.
பட்டு பளபளப்பைத் தரக்கூடியது. ஆனால் பருத்தி வகை, துணிக்கு
வலு சேர்க்கக்கூடியதாகும். கட்டங்களுடன் கூடிய வகை துணி காட்
எனக்கூறப்படுகிறது. அது கோட்டா டோரியா துணியின்
தனித்துவமான அம்சமாகும். கோட்டா டோரியா கனமில்லாத
நுணுக்கமிக்க ஒரு நெசவாகும்.

கோட்டா நெசவாளர்களுடன் பணியாற்றிய போது
நெசவாளர்களின் கலைத்திறனுடன், இந்தியாவில் கைத்தறி தொழில்
அதன் செழுமையையும், இந்திய கலாச்சாரத்தின்
பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கிறது. கைத்தறி தொழிலில், 4.3
மில்லியன் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில், வேளாண்மைக்கு அடுத்தபடியாக கைத்தறி தொழில்
கிராமங்களில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்
தொழிலாகும். இந்திய கைத்தறி உற்பத்திப் பொருட்கள் அதன்
தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் நுணுக்கமான
வேலைப்பாட்டுக்கு பெயர் பெற்றவையாகும். பழைய
வடிவமைப்புகளை புதிய தொழில்நுட்பங்களுடன் கலந்து அசல்
பொருட்களை உருவாக்கும் போக்கு காணப்படுகிறது.

கைத்தறி தொழில் உண்மையில் நமது முதுகெலும்பாகும். அது
ஆடைத்தொழிலுடன் தொடர்பு கொண்டுள்ளது. நான் இருபத்தைந்து
ஆண்டுகளாக வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். இந்தத்
தொழிலில் நான் முன்னோடியாக உள்ளேன். அத்துடன் எப்டிசிஐ-யின்
நிறுவன உறுப்பினரும் ஆவேன். நான் பின்வரும் ஆலோசனைகளை
பரிசீலனைக்காக முன்வைக்கிறேன்.
அ, திறன் உருவாக்கம் வழங்குதல்
ஆ, டிஜிட்டல்மயமாக்கம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டை
ஊக்குவித்தல்
இ, நெசவாளர்களின் உற்பத்தி மற்றும் சேவைகளுக்கு வணிக
முத்திரை இடத்தை உருவாக்கி உதவுதல்
ஈ, உலகச் சந்தைகளுடன் தொடர்பு ஏற்படுத்துதல்
இந்தியாவில் அரசின் கடைவீதி கண்காட்சிகள் அல்லது சர்வதேச
சந்தைகள் –
இந்த மாதிரி தற்போதைய காலத்திற்கு ஏற்ப மறுவடிவமைப்புடன்
உருவாக்கப்பட்டது. டில்லி காட் என்பது அருமையான மாதிரியின்
பிரதிபலிப்பு அல்லது பாரம்பரிய அடிப்படையிலான ஏற்கனவே
உள்ளதை நவீனமயமாக்குதலாகும்.
கைவினைப்பொருட்களுக்கு ஆதரவளிக்கும் சுற்றுலா மதிப்பு
அடிப்படையிலான திரைப்படங்களை உருவாக்கலாம்- அவற்றை
முக்கிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பலாம். சமூக ஊடகங்கள்
மூலமாகவும் அவற்றை பிரபலப்படுத்தலாம். கைத்தறித் துறையை
பிரபலப்படுத்தும் இதர நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.
கடந்த காலத்தில், பாக்ஸ் டிராவலரில், நான் லக்னோவில் அதன்
கைவினைக்கலைகள் பற்றி தொலைக்காட்சிகளுக்காக படம்
பிடித்தேன்.

0Shares

Leave a Reply