Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 06, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 06, 2021

சென்னை: பிலவ வருடம் ஆடி 21ஆம் தேதி ஆகஸ்ட் 06,2021, வெள்ளிக்கிழமை. திரயோதசி திதி மாலை 06.28 மணி வரை அதன் பின் சதுர்த்தசி திதி. திருவாதிரை காலை 06.37 மணி வரை அதன் பின் புனர்பூசம். சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணிக்கிறார். இன்றைய தினம் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்திக்கூர்மையால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுப காரிய பேச்சுவார்தைகளில் வெற்றி கிடைக்கும். பண விசயங்களில் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

ரிஷபம்
சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணிக்கிறார் பணவரவு அதிகரிக்கும். வீண் செலவை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் உயரும். பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான செயல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

மிதுனம்
ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனதில் அமைதி குறையும் என்றாலும் குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான போட்டிகள் அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் கவனத்துடன் செயல்படவும். சொத்து சார்ந்த செயல்களில் நிதானம் வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் கவனம் தேவை.

கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணிக்கிறார். இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் நான்கு கிரகங்களினால் பணவரவு கூடும். தொழில் சார்ந்த முதலீடுகளில் நிதானமாக செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயர்கல்வி தொடர்பான விசயங்களில் வெற்றி கிடைக்கும். வேலை விசயமாக வெளியூர் செல்வீர்கள்.

சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணிக்கிறார். நான்கு கிரகங்கள் ராசியில் பயணிப்பதால் உற்சாகம் கூடும். முகத்தில் பொலிவு அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதுவிதமான மாற்றங்கள் செய்வீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செய்யும் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் நன்மைகள் ஏற்படும்.

கன்னி
சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் உற்சாகம் கூடும். உடன்பிறப்புகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். திட்டமிட்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான செயல்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

துலாம்
சந்திரன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பணவரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளால் மனக்கசப்புகள் ஏற்படக்கூடும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணிபுரியும் இடத்தில் பொருட்களை கவனமாக கையாளவும்.

விருச்சிகம்
சந்திரன் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்வும். எதிர்பார்த்த பயணங்கள் காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எந்த செயலையும் செய்யும் முன்பு சிந்தித்து செயல்படவும். சொத்து பிரிவினைகளில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணி சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்கள் இன்றைக்கு வேண்டாம்.

தனுசு
சந்திரன் களத்திர ஸ்தானத்தில் இன்றைய தினம் சஞ்சரிக்கிறார். வீட்டில் நிதானம் தேவை. பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பொதுநலம் சம்பந்தமான செயல்களில் தேவையான ஆதரவுகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்று.

மகரம்
சந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் நலத்தில் அக்கறை தேவை. பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதுவிதமான முயற்சிகளால் மதிப்பும், மரியாதையும் கூடும். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடங்களில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும்.

கும்பம்
சந்திரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். திருமணம் சம்பந்தமான சுப முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். சாமர்த்தியமான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள்.

மீனம்
சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். குழந்தைகளின் உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவ செலவுகள் வரலாம். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *