Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை ஜூலை 26, 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்கிழமை ஜூலை 26, 2021
சென்னை: பிலவ வருடம் ஆடி 10 ஆம் தேதி ஜூலை 26,2021 திங்கட்கிழமை. திருதியைத் திதி இரவு 02.55 மணி வரை அதன் பின் சதுர்த்தி திதி. அவிட்டம் பகல் 10.26 மணி வரை அதன் பின் சதயம். சந்திரபகவான் ஆசி நிறைந்த திங்கட்கிழமையான இன்றைய தினம் கும்ப ராசியில் சந்திரன் பயணம் செய்வதால் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் என்று பார்க்கலாம்.
மேஷம்
ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சந்திரன் குரு பகவானுடன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். பணம் பல திசைகளில் இருந்தும் வரும். வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். லாப ஸ்தானத்தில் குரு சந்திர யோகம் கூடி வந்துள்ளதால் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
ரிஷபம்
ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் குரு உடன் இணைந்து அமர்ந்துள்ளதால் அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். திடீர் பண வருமானம் வரும்.
புதன்பெயர்ச்சி 2021: கடக ராசியில் சூரியனுடன் இணையும் புதன் – எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் மிதுனம் ராசிக்கு 9வது வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் குரு பகவானுடன் அமர்ந்துள்ளதால் அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். தமிழ் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம்… பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட கமல்ஹாசன் வேண்டுகோள்
கடகம்
ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் குரு பகவானுடன் அமர்ந்துள்ளார். இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் பேச்சிலும் வேலையிலும் கவனம் தேவை. வீண் விதண்டாவாதத்தை குறைத்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும். இன்று வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவும் அதிகரிக்கும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் குருவுடன் அமர்ந்துள்ளதால் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குரு சந்திரன் பார்வை உங்கள் ராசியில் உள்ள சுக்கிரன் செவ்வாய் மீது விழுவதால் முகத்தில் தெளிவு பிறக்கும். சுப காரியம் தொடர்பாக பேசலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.
கன்னி
உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் குருபகவானுடன் மறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சின்னச் சின்ன நோய் பாதிப்புகள் ஏற்படும். இன்றைய தினம் யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். பேச்சு திறமை அதிகரிக்கும். பயணங்களால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
துலாம்
ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் குரு பகவானுடன் அமர்ந்துள்ளார். பிள்ளைகளின் உடல் நலனில் அக்கறை தேவை. பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். பூர்வீக சொத்துக்களை விற்க முயற்சி செய்யலாம். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும்.
விருச்சிகம்
ராசிக்கு 4வது வீட்டில் சுக ஸ்தானத்தில் குருவுடன் இணைந்து சந்திரன் அமர்ந்துள்ளதால் உங்களின் பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். பயணங்களால் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியத்தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். தனுசு ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் குரு பகவானுடன் அமர்ந்து உள்ளார். தடைகளை தாண்டி காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மனதில் உறுதி அதிகரிக்கும். சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மன நிம்மதி அதிகரிக்கும்.
மகரம்
ராசிக்கு 2வது வீட்டில் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குருவும் சந்திரனும் அமர்ந்துள்ளனர். இன்று எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.
கும்பம்
குருவும் சந்திரனும் உங்கள் ராசிக்குள் அமர்ந்துள்ளதால் சற்றே மனக்குழப்பமாக இருக்கும். இன்று வேலையில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு பாராட்டு வாங்குவீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் வருவார்கள். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
மீனம்
உங்களுடைய ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் குரு உடன் அமர்ந்துள்ளார். சின்னச் சின்ன சுப செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலை விசயமாக வெளியூர் பயணம் செய்யலாம். உத்தியோகத்தில் சிலருக்கு இடம் மாறுதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.