தமிழகத்தில் தேசவிரோத சக்திகள் அதிகரிப்பு* _எச் ராஜா குற்றச்சாட்டு._

Loading

சிவகங்கை ஜூலை 25

தமிழகத்தில் சமீபகாலமாக தேச விரோத செயல்கள் இந்து விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை மதபோதகர் ஜார்ஜ் பொன்னையாவைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டு எச் ராஜா பேசியதாவது,

“சமீபகாலமாக தேசவிரோத, மற்றும் இந்துவிரோத செயல்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை அவதூறாகவும், மதமோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைக் கண்டித்தும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்”
என வலியுறுத்தியும் பேசியவர்
மேலும்
“நாங்கள் போட்ட பிச்சையில்தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்று ஜார்ஜ் பொன்னையா சொல்வதைக் கேட்டுக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் மௌனமாக உள்ளது ஏன்?”
என்றும்
இந்து சமய அறநிலையத் துறைக்கோவில் சொத்துக்களை இந்து அல்லாதவர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது” என்றும்
“சென்னையில் வடபழனி கோவிலுக்குச் சொந்தமான சொத்தை மசூதிக்கு விற்றுள்ளனர்.
அந்நிலத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மீட்க வேண்டும்”
என்றும்
“பொது சிவில் சட்டம் மற்றும் மதமாற்ற தடைச் சட்டம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்” என்றும் பேசினார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி தலைமை தாங்கினார்.
சிவகங்கை நகர்த் தலைவர் தனசேகரன் வரவேற்றுப் பேசினார். முக்கிய கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply