கார் விபத்து – நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Loading

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நடிகை யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் நேற்று நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார். அப்போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அவர் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடிகை யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நடிகை யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது என்பன உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *