அருமனையில் நடந்த பொது கூட்டத்தில் சர்சைக்குரிய பேச்சால் ஜார்ஜ் பொன்னையா… 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது

Loading

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த பொது கூட்டத்தில் சர்சைக்குரிய பேச்சால் ஜார்ஜ் பொன்னையா… 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மாவட்டம் முழுவதும் பல இடங்களில் போலீசார் குவிப்பு…

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த 18-ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் பேசிய பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா, தமிழகத்தில் தி.மு.க வெற்றி பெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்றும். மண்டைக்காடு கோயில் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சரான சேகர்பாபு, தகவல்தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் முந்திக்கொண்டு இருந்ததாகவும். சுசீந்திரம் கோயிலில் மேலாடை அணியாமல் அமைச்சர்கள் சேகர்பாபுவும், மனோதங்கராஜும் சென்று வருவதாகவும். நாம் சர்சுக்கு போகும்போது கோட், டை அணிந்து டிப்டாப்பாக செல்கிறோம் என்றும் பேசியிருந்தார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்று விட்டு எம்.எல்.ஏ-க்கள் இந்து கோயில்கள்தோறும் சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்துக்கள் உங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று பேசினார் மேலும் மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் குறித்தும் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை பேசியுள்ளார். மேலும் நாகர்கோவில் சட்ட மன்ற உறுப்பினரான M.R காந்தி செருப்பு அணிவதில்லை அதற்கும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இந்த வீடியோ வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் வைரலாக பரவி வந்தது . மேலும் கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா மத மோதலை தூண்டும் விதமாக பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்களில் பா.ஜ.க மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சுமார் 30 புகார்கள் அளித்துள்ளனர்.
இதுகுறித்து பனவிளை சர்ச் பங்குதந்தையும், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகருமான ஜார்ஜ் பொன்னையா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா, அருமனை கிருஸ்தவ இயக்கத்தை சேர்ந்த அருமனை ஸ்டீபன் மற்றும் பலர் மீது ஏழு பிரிவின் கீழ் அருமனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா உள்ளிட்டோரை கைது செய்ய எஸ். பி பத்திரி நாராயணன் தலைமையிலான 7 தனிபடையினர் தேடி வந்த நிலையில் அவர் நேற்று காலை மதுரை அடுத்து திருமங்கலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்த குமரி மாவட்ட தனி படையினர் அவரை கைது செய்து கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து குழித்துறை நீதி மன்றம் அழைத்து ஆஜர்படுத்தினர் இதனால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் போலீசார் குவிக்கப்ட்டு உள்ளனர்…

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *