Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை ஜூலை 22, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை ஜூலை 22, 2021

சென்னை: பிலவ வருடம் ஆடி 06 ஆம் தேதி ஜூலை 22,2021 வியாழக்கிழமை. திரயோதசி திதி பகல் 01.33 மணி வரை அதன் பின் சதுர்த்தசி திதி. மூலம் மாலை 04.25 மணி வரை அதன் பின் பூராடம். சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்று ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

ரிஷபம்
சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வது உத்தமம்.

மிதுனம்
சந்திரன் இன்று ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கடகம் சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள் மகிழ்ச்சிகரமான நாளாக அமையும்

. கன்னி
சந்திரன் பயணம் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் உள்ளதால் வீடு பராமரிப்பு வேலை செய்வீர்கள். இன்று உங்களுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நோய் பாதிப்புகள் வந்து நீங்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் படிப்படியாக குறையும். எந்த விஷயத்திலும் பொறுமையுடனும், கவனமுடனும் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் உடன் செய்பவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

துலாம்
சந்திரன் பயணம் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் பிரச்சினைகள் குறையும். உடல்நிலை சீராகும்.

விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தனுசு
சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். வீட்டிற்கு உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அளிக்கும். சுப காரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பெண்களுக்குத் தேவையான ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.

மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திடீர் விரைய செலவுகள் ஏற்படும். இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் எதிர்பாராத திடீர் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். இன்று தொழில் ரீதியான நெருக்கடிகள் நீங்கும். பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆலய வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.

மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்ப உறவுகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வங்கி சேமிப்பு உயரும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். மேற்படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

0Shares

Leave a Reply