Fxb (எப் எக்ஸ் பி )இந்தியா சுரக்ஷா தொண்டு நிறுவனம் புதுவை அரசுடன் கைகோர்த்து whirlpool இந்தியா லிமிடெட் முலமாக அவசர உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கல் போன்ற பல்வேறு வகைகளில் மக்கள் தொண்டாற்றி வருகிறது.
புதுச்சேரி, கொரோனா பாதிப்புள்ள இக்காலகட்டத்தில் திருபுவனையில் இயங்கி வரும் Fxb (எப் எக்ஸ் பி )இந்தியா சுரக்ஷா தொண்டு நிறுவனம் புதுவை அரசுடன் கைகோர்த்து whirlpool இந்தியா லிமிடெட் முலமாக அவசர உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உதவிகள் , மக்கள் பாதுகாப்பு, பொது மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு, பதாகை, ஒலிபெருக்கிமூலம் தடுப்பூசி விழிப்புணர்வு, கிருமிநாசினி, சுவாசக் கருவிகள் மற்றும் ICU தேவைப்படும் படுக்கை உபகரணங்கள் ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கல் போன்ற பல்வேறு வகைகளில் மக்கள் தொண்டாற்றி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிகமான பாதிப்புகளும் உயிர் இழப்புகளும் ஏற்பட்ட இந்நிலையில். கோவிட் ஆக்ஷன் கோலாப் நிறுவனம் மூலமாக 9(ஒன்பது )
லட்சம் மதிப்பீலான 1200 தனிநபர் கவச உடை, 400 முகக்கவசம் மற்றும் ஷீல்டு ஆகிய மருத்துவ பாதுகாப்பு பொருட்களை 22.07.21 அன்று புதுவை மாண்புமிகு முதல்வர் திரு. ரங்கசாமி மற்றும் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.லட்சுமி நாராயணன், சுகாதாரத் துறை செயலாளர் மருத்துவர் அருண் IAS அவர்களின் முன்னிலையில் அவர்களிடம் எப் எக்ஸ் பி(FXB) திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.யுவராஜ். ராஜகுமார், ராஜா, அழகுநாதன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் சுகாதாரத் துறையின் இயக்குநர் மருத்துவர் மோகன் குமார், சுகாதார திட்ட இயக்குனர் மருத்துவர் ஸ்ரீராமுலு, சுகாதார துணை இயக்குனர்கள் மருத்துவர் முரளி, மருத்துவர் திருமலை சங்கர், மருத்துவர் முருகன், கோவிட் நோடல் அதிகாரி மருத்துவர் ரமேஷ் , மருத்துவர் ரவிவர்மன் மற்றும் மருத்துவர் துரைசாமிஆகியோர் கலந்து கொண்டனர்.