புதுச்சேரியில்நோய்த்தொற்று இருப்பவர்கள் தொடர்ந்து எண்ணிக்கை 955 ஆக குறைந்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு மேலும் குறைந்து வருகிறது. தற்போது 68 நபர்கள் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், 147 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்கள் மற்றும் 808 பேர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும்
72 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்.
தொற்றிலிருந்து மீண்டோரின் சதவீதம் 97.72 ஆக தொடர்ந்து உயர்கிறது. புதுச்சேரியில் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் சேர்த்து நோய்த்தொற்று இருப்பவர்கள் தொடர்ந்து எண்ணிக்கை 955 ஆக குறைந்துள்ளது.
இன்று புதுச்சேரியில் டெஸ்ட் பாசிட்விட்டி
(1.47%) சதவீதம் உள்ளது.
இதுவரை 6,54,510 கொரோனா தடுப்பூசிகள் புதுச்சேரியில் போடப்பட்டுள்ளன என்று புதுச்சேரி சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் T.அருண் IAS அவர்கள் தெரிவித்துள்ளார்.