கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது. 21 கிலோ கஞ்சா பறிமுதல்

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அவரின் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கபட்டு அதிகளவு கஞ்சா பறிமுதல் செய்தும் கஞ்சா வியாபாரிகளை கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இதுவரை 60 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யபட்டு அவர்களிடம் இருந்து பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் வடசேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்,
கம்பம் உத்தமபாளையம் பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வி( 45 ) புத்தேரி மேல கலுங்கடி பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துதாஸ் (47), இடலாக்குடி கீழசரக்கல்விளை பகுதியைச் சேர்ந்த காமராஜ்(50) ஆகிய மூன்று பேர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துஅவர்களை கைது செய்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

0Shares

Leave a Reply