அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திலிருந்து விலகி ஜெமிலா அதிமுகவில் இணைந்தார்.

Loading

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் மற்றும் ஊடகச்செய்தி தொடர்பாளரான டாக்டர் ஜெமிலா கட்சியிலிருந்து விலகி அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்தார்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் பல்வேறு கூட்டங்களிலும், பிரச்சாரங்களிலும் கலந்துகொண்டு கட்சியின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகப் பேசி வந்தார். தொலைக்காட்சி விவாதங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பிரதிநிதியாகவும் கலந்துகொண்டு ஜெமிலா பேசி வந்தார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் மக்களுக்கான சேவை, ஆட்சி அமைப்பது என்ற எந்த குறிக்கோளும் இல்லாமல் அதிமுகவை மீட்பது மட்டுமே இலக்காகக்கொண்டு பயணிப்பதை ஏற்க முடியவில்லை என்றும் தொடர் மௌனத்தில் தலைமை இருப்பது கட்சியை எதிர்காலம் இல்லாத நிலைக்குத்தள்ளிவிட்டது என்ற காரணத்தாலும், மக்கள் பணி செய்ய சரியான அரசியல் இயக்கமாக மக்களுக்கான சேவையில் தொடர்ந்து இயங்கிவரும் அதிமுக வில் தன்னை இணைத்துக்கொண்டதாகத்தெரிவிக்கிறார். ஆகவே அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply