Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஜூலை 21, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஜூலை 21, 2021

சென்னை: பிலவ வருடம் ஆடி 05 ஆம் தேதி ஜூலை 21,2021 புதன்கிழமை. துவாதசி திதி மாலை 04.26 மணி வரை அதன் பின் திரயோதசி திதி. கேட்டை நட்சத்திரம் மாலை 06.30 மணி வரை அதன் பின் மூலம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் விருச்சிக ராசியிலும் மாலைக்கு மேல் தனுசு ராசியிலும் பயணம் செய்கிறார். மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டு மற்றும் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு மாலை 06.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக இருக்கும் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். மனதில் உற்சாகமாக உணர்வீர்கள். உங்கள் ராசிக்கு மாலை 06.30 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படும்.

மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமாக பயணம் செய்கிறார். இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிவடையும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சினைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

சிம்மம்
சந்திரன் பயணத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

கன்னி
சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் நெருக்கடிகள் குறையும்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்திலும் ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் பயணம் செய்கிறார். இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்குள் இருந்து மாலைக்கு மேல் இரண்டாம் வீட்டிற்குள் நுழைகிறார். இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். செய்யும் தொழிலில் கவனம் தேவை. உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆலய வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.

தனுசு
சந்திரன் உங்கள் ராசிக்குள் நுழைகிறார். இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். கொடுத்த கடன்கள் கைக்கு வரும்.

மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சுப காரியங்கள் கைகூடும். இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும்.

கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வங்கி சேமிப்பு உயரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வேலை செய்யும் இடத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். பண வருமானம் அதிகரிக்கும்.

மீனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிற்குள் வருகிறார். இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *