ஓசூரில் ஏல சீட்டை நடத்தி பலகோடி ரூபாய் மோசடி, குடும்பத்துடன் தலைமறைவு,

Loading

ஓசூரில் ஏல சீட்டை நடத்தி பலகோடி ரூபாய் மோசடி, குடும்பத்துடன் தலைமறைவு, பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை முற்றுகை…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, பழைய மத்திகிரி பகுதியில் பொதிகை நகரில் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் ரவிச்சந்திரன் , இவர் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.. இவரது மனைவி லதாவுடன் இனைந்து வீட்டிலியே 15 ஆண்டுகளாக ஏல சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மனைவி லதா 50 ஆயிரம் ரூபாய் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை சீட்டு நடத்தி வந்ததால் பலரும் மாதந்தோறும் சீட்டுபணம் செலுத்தி வந்துள்ளனர். பல ஆண்டுகளாக சீட்டு பணம் சரியாக வழங்கப்பட்டதால் பரிந்துரையின் பேரில் சுமார் 500 நபர்களுக்கும் அதிகமானோர் தற்போது சீட்டு பணம் மாதந்தோறும் கட்டி வந்துள்ளனர்

கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி சீட்டை எடுத்தவர்களுக்கு பணம் தர காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது…

சீட்டை நடத்தி வந்த லதா என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறிய கணவர் ரவிசந்திரன் பணத்தை அவர் சரியான பின்பு அனைவருக்கும் வழங்கப்பட்டும் என தெரிவித்த வந்த நிலையில்

ஞாயிறு முதல் ரவிச்சந்திரனின் வீடு பூட்டப்பட்டுள்ளது.. அவரின் குடும்பத்தார் தொலைபேசியை ஆப் செய்துள்ளதாகவும், வீட்டிலிருந்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில்…

சீட்டு பணம் செலுத்தி வந்தோரில் 100க்கும் அதிகமானோர் திரண்டு இன்று மதியம் ரவிச்சந்திரனின் வீட்டை முற்றுகையிட்டனர்..

இதுக்குறித்து பாதிக்கப்பட்டோர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்:

வீடு, திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக மாதந்தோறும் ஊதியத்தை மிச்சப்படுத்தி தவனை முறையில் சீட்டு பணம் கட்டி உள்ளோம். எதிர்கால தேவைக்காக சேமிக்கப்பட்ட பணம் என்பதால் போலிசார் இவர்களை கண்டுபிடித்து பணத்தை பெற்றுதர உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்..

பலரின் வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு அமைக்கப்பட்டுள்ள 4 கதவுகளின் முன்பாகவும் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்களையும் வைத்து பணம் வாங்க வருபவர்களை அச்சமடைய வைக்கும் விதமாக உள்ளதாகவும்

தொடர்ந்து 4 நாட்களாக வீடு பூட்டப்பட்டு இருப்பதால் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

சீட்டு பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது பலருக்கும் தெரியாது என்பதால் இதுவரை வந்தோர்களிடம் மட்டும் ரூ25 கோடி முதல் 30 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *