திருச்சியில் அனைத்து துறை ஊர்தி ஓட்டுனர்கள் தலைமைச் சங்க கூட்டம்

Loading

திருச்சி:
தமிழ்நாடு அனைத்து துறை ஊர்தி ஓட்டுனர்கள் தலைமைச் சங்க கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து துறை ஊர்தி ஓட்டுனர்கள் தலைமைச் சங்க அனைத்து மாவட்ட, தாலுக்கா நிர்வாகிகள்,மாநில செயற்குழு கூட்டம் மற்றும் அனைத்து மாவட்ட கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் தயாளன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் விக்டர் மற்றும் மாநில பொருளாளர் இக்பால் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாடு முதலமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையான கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மூலம் தமிழக மக்களை மீட்டெடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அனைத்து துறை ஊர்தி ஓட்டுநர் தலைமை சங்க முன்னாள் மாநில தலைவர் சகாதேவன் மற்றும் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த ஓட்டுநர்கள் அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

31.5.2009ம் தேதிக்கு பிறகு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை எய்திய ஓட்டுனர்களுக்கு ரூ 9800- 4200-4400 என்ற அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும்.
கரோனா பணியில் ஈடுபட்ட ஓட்டுனர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து அனைத்து துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *