Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஜூலை 16, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஜூலை 16, 2021 சென்னை:

பிலவ வருடம் ஆனி 32ஆம் தேதி ஜூலை 16,2021 வெள்ளிக்கிழமை. சஷ்டி திதி காலை 06.06 மணிவரை அதன் பின் சப்தமி மறுநாள் விடிகாலை 04.34 மணிவரை அதன் பின் அஷ்டமி. ஹஸ்தம் இரவு 02.34 மணி வரை அதன் பின் சித்திரை. சந்திரன் இன்றைய தினம் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. சுக்கிரபகவான் ஆசி நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

ரிஷபம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இன்று நெருங்கியவர்களால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். வியாபாரத்தில் பணவரவு நன்றாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். பெண்கள் வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலை செய்யுமிடத்தில் புதிய இட மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் நிலையில் உற்சாகம் ஏற்படும். திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவு செய்வீல்கள். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும் நிதி நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பெற்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். பண விசயத்தில் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் அமைதியும் மனதில் சந்தோஷமும் ஏற்படும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பாக்ய ஸ்தானங்களில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். உறவினர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் எதிர் பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வும் கவனமும் அவசியம். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனமும் நிதானமும் தேவை.

மீனம்
சந்திரன் இன்று உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரனின் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பதால் பேச்சில் தெளிவும் மனதில் தன்னம்பிக்கையும் பிறக்கும். இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் தீரும்.

0Shares

Leave a Reply