Skimmer கருவி மூலம் ATM கார்டுகளின் தகவல்களை திருடி பணம் மோசடி செய்து வந்த மூன்று பேர் அடங்கிய கும்பல் கைது
Skimmer கருவி மூலம் ATM கார்டுகளின் தகவல்களை திருடி பணம் மோசடி செய்து வந்த மூன்று பேர் அடங்கிய கும்பல் கைது . சென்னை பெருநகர காவல் நிலையத்தில் திருட்டு குற்றங்களை கட்டுபடுத்த தேவையான முயற்சிகளை எடுக்கப்படுவது போன்றே சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி அத்தகைய குற்றங்களில் ஈடுபடும் நபர்களையும் கைது செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றங்களை கண்டுபிடிப்பதிலும் குற்றவாளிகளை அடையாளம் காணுவதிலும் உரிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் அவர்கள் ‘ உத்தரவிட்டுள்ளார் . அதன்படி சைபர் உள்ளிட்ட குற்றங்களில் பல்வேறு குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர் . 2. ATM கார்டுகளின் தகவல்களை திருடி அதன் மூலம் இந்தியாவின் பல இடங்களில் பணத்தை திருடும் கும்பல் பற்றி கிடைத்த ரகசிய தகவலின் படி தனிப்படை அமைத்து விசாரணையை செய்து வந்தபோது கானாத்தூரில் முட்டுகாடு சோதனை சாவடியில் வாகன தணிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் காரில் வந்த திருச்சி கக்கன் காலனி பகுதியை சேர்ந்த 1 ) லாவா சந்தன் வயது 32 திருச்சி கே.கேநகர் பகுதியை சேர்ந்த 2 ) பிரவின் கிசோர் வயது 30 திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேரந்த 3 ) சிக்கேந்தர் பாதுசா வயது 37 ஆகிய மூன்று பேரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்களிடம் ஏராளமான ATM கார்டுகள் மற்றும் Skimmer கருவிகள் இருந்ததை கண்டு மூன்று பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர் . இவர்கள் மூவரையும் ‘ விசாரணை செய்ததில் முக்கிய குற்றவாளியான லாவா சந்தன் என்பவர் ATM கார்டுகளை Skimmer கருவி மூலம் ஸ்கேன் செய்து அதன் மூலம் பணத்தை கொள்ளையடித்ததாக கோயம்புத்தார் CCB பிரிவினரால் கடந்த 2017 ம் ஆண்டு அவரின் கூட்டாளிகளுடன் சேரந்து கைது செய்யப்பட்டிருப்பதும் அதன் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது . மேற்கொண்டு விசாரணை செய்ததில் சிக்கேந்தர் என்பவர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்களில் வேலை பார்த்து வந்ததும் மசாஜ் சென்டர்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் வரும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் ATM கார்டுகளை Swiping Machine ல் ஸ்கேன் செய்யும் போது அதில் Skimmer கருவிகள் பொருத்தி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ATM கார்டுகளின் தகவல்களை திருடுவதும் பின் அந்த தகவல்களை வைத்து போலியான ATM கார்டுகளை செய்து அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி பிட் காயின் போன்ற ஆன்லைனில் வர்த்தகத்தில் முதலீடு செய்து பின் தங்கள் கூட்டாளிகளுடன் கொள்ளையடித்த பணத்தை பகிர்ந்து கொள்வதும் தெரியவந்தது . இதனையடுத்து மேற்கண்ட மூன்று பேரையும் கைது தனிப்படையினர் அவர்களிடம் இருந்து Skimmer கருவியையும் லேப்டாப் மற்றும் ஏராளமான போலியான ATM கார்டுகளையும் தனிப்படையினர் கைப்பற்றப்பட்டு மேற்கண்ட மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்