1330 திருக்குறளையும் கண்ணாடி பிம்ப தலைகீழ் எழுத்தாக எழுதி சாதனை நிகழ்த்திய ஓட்டுநர்.
காரைக்குடி ஜூலை 16
காரைக்குடி அருகே நாட்டுச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தியமூர்த்தி. வயது 37. இவர் வாடகை கார் ஓட்டுநராக வேலை பார்த்துவருகிறார்
இவர் 1330 திருக்குறள்களையும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் எழுத்துக்கள்போல் தலைகீழாக திருப்பி எழுதி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
தலைகீழாக கண்ணாடி பிரதிபலிப்பு எழுத்துக்கள் எழுதும் திறன்படைத்த இவர், தனது திறமையை சாதனையாக்கும் நோக்கத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வள்ளுவர் பேரவை அமைப்பாளர்கள் செயங்கொண்டான், முத்துக்குமார், பிரகாஷ் மணிமாறன் உதவியுடன் சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்தார்.
இந்நிகழ்ச்சி நேற்று காலை
10 மணிக்கு காரைக்குடி அரியக்குடி வளைவு அருகில் தெ.நா அரங்கத்தில் நடைபெற்றது. இன்று காலை 10:35 மணி அளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இடையிடையே எடுத்துக்கொண்ட ஓய்வு நேரங்களை கழித்து மொத்தமாக 1330 திருக்குறள்களையும்
17 மணி 19 நிமிட நேரத்தில் எழுதிமுடித்தார்.
சாதனை நிகழ்த்திய கார்த்தியமூர்த்தி பேசுகையில்
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவசர ஊர்தியில் உள்ள தலைகீழான கண்ணாடியில் பிரதிபலிக்கும் எழுத்துக்களைப் பார்த்து அதேபோல் தலைகீழாக எழுதிப்பழக ஆரம்பித்தேன். பின்பு அதை ஒரு முயற்சியாக பயிற்சி எடுத்து இப்பொழுது விரைவாக எழுதப் பழகிவிட்டேன்
பின்னர் ஒரு முயற்சியாக 1330 திருக்குறள்களையும் கண்ணாடி பிரதிபலிப்பு எழுத்துக்களாக எழுதி சாதனைசெய்து அதை சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற விரும்பி விண்ணப்பித்திருந்தேன்.
என்றும்
அந்த நிகழ்ச்சி இன்று காரைக்குடியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
என்றும்
இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும்
திருக்குறளின் உயர்வை, பெருமையை அனைவருக்கும் உணர்த்தி விளக்கவும் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டதாகவும் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் நிமலன் நீலமேகம் நேரில் வருகைதந்து பார்வையிட்டார்.
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் மாங்குடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கார்த்தியமூர்த்தியின் சாதனையைவாழ்த்தி பேசினார்.
முன்னதாக வள்ளுவர் பேரவையின் நிறுவனர் செயங்கொண்டான் வரவேற்றுப் பேசினார்.
பூதக்கண்ணாடி கல்வி மைய புரவலர் சேவியர் அந்தோணிராஜ்,
வள்ளுவர் பேரவை கௌரவ ஆலோசகர் சேவு.முத்துக்குமார் முன்னிலை வகித்தனர்.
பிள்ளையார்பட்டி குபேரர் திருக்கோயில் அறங்காவலர் நாச்சியப்பன் தலைமை வகித்தார்.