கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி செயலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ. 8.5 இலட்சம் நிவாரண உதவியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கை ஜூலை 14
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த 3 ஊராட்சி செயலாளர்களின் 5 குழந்தைகளுக்கு ரூ 8.5 இலட்சம் நிவாரண நிதியை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
கே ஆர் பெரியகருப்பன் வழங்கினார்.
கொரோனா இரண்டாம்
கட்ட அலையில்
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஒன்றியம் கருங்குளம் ஊராட்சி செயலாளராக பணியிலிருந்த ஜெயசுதா, திருப்புவனம் ஒன்றியம் தொட்டப்பட்டி ஊராட்சி செயலாளராக பணியிலிருந்த பாக்கியராஜ்,
சிங்கம்புணரி ஒன்றியம் எருமைப்பட்டி கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணியிலிருந்த முருகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
மேற்படி ஊராட்சி செயலாளர்களின் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டு கருங்குளம் ஊராட்சி செயலாளராக இருந்த ஜெயசுதா என்பவரின் குழந்தைகள் கதிர்சீலன் குணசீலன் ஆகியோருக்கு தலா ரூ ஓர் இலட்சமும், பாக்யராஜ் பெண் குழந்தைகளான சுபஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகியோருக்கு தலா 1.5 லட்ச ரூபாயும்,
முருகன் மகன் இராகுலுக்கு ஓர் இலட்சமும் சேகரிக்கப்பட்டது.
இத்துடன் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
கே ஆர் பெரியகருப்பன்
தன்னுடைய பங்களிப்பாக ஐந்து குழந்தைகளுக்கும் தலா 50 ஆயிரம் வீதம் 2.5 இலட்ச ரூபாயையும் மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் முன்னிலையில் வழங்கினார்.
குழந்தைகளின் சார்பாக நீதியை பெற்றுக் கொண்ட குழந்தைகளின் காப்பாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகளும்
ஊரக வளர்ச்சி துறை அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.